ஆடம்பர வீடுகளைக் கொண்ட 10 இந்திய வீரர்கள்: முதலிடத்தில் யாரும் எதிர்பாராத வீரர்
11 ஐப்பசி 2025 சனி 17:25 | பார்வைகள் : 1689
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் ஆடம்பர வீடுகளைக் கொண்ட 10 பேர் குறித்து இங்கே காண்போம்.
ஜாம்பவான் வீரரான சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar) தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.
இவருக்கு கோவாவில் ஆடம்பர வில்லா உள்ளது. இதன் விலை ரூ.20 கோடி ஆகும். இதன்மூலம் இவர் இப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வீரரான ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) மும்பையில் ஒரு பிளாட் வைத்துள்ளார். இந்த ஆடம்பர பிளாட்டின் மதிப்பு ரூ.30 கோடி என்று கூறப்படுகிறது.
ரோஹித் ஷர்மா
அதிரடி வீரராக பல சாதனைகள் படைத்துள்ள ரோஹித் ஷர்மா (Rohit Sharma) இப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளார். இவருக்கும் மும்பை நகரில் ஆடம்பர வீடு உள்ளது. இதன் மதிப்பும் ரூ.30 கோடி ஆகும்.
சச்சின் டெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) வைத்துள்ள ஆடம்பர வீட்டின் விலை சுமார் ரூ.38 கோடி ஆகும்.
எனினும் அவர் இந்த வீட்டில் புதுப்பித்தல் பணிகளை செய்திருக்கிறார். இதற்கு அவர் செய்த செலவு ரூ.60 கோடி என்று கூறப்படுகிறது.
சவுரவ் கங்குலி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சவுரவ் கங்குலி (Sourav Ganguly) கொல்கத்தாவில் ஆடம்பர வீடு வைத்துள்ளார்.
இதன் மதிப்பு ரூ.40 கோடி என்று கூறப்படுகிறது. இதன்மூலம் அவர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
யுவராஜ் சிங்
இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் (Yuvraj Singh) மும்பையில் ஆடம்பர வீடு வைத்துள்ளார்.
இந்த வீட்டின் விலை ரூ.64 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சண்டிகரிலும் யுவராஜ் சிங் ஒரு சொகுசு பங்களாவை வைத்துள்ளார்.
ஷிகர் தவான்
இடது கை துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் (Shikar Dhawan) ஹரியானாவில் குருகிராமில் ஆடம்பர வைத்துள்ளார். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 69 கோடி என்று கூறப்பட்டுள்ளது.
விராட் கோஹ்லி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோஹ்லியும் (Virat Kohli) குருகிராமில் வீடு வைத்துள்ளார்.
இந்த ஆடம்பர வீட்டின் விலை ரூ.80 கோடி ஆகும். மேலும் மும்பை மற்றும் பல இடங்களிலும் கோஹ்லிக்கு வீடுகள் உள்ளன.
மகேந்திர சிங் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான எம்.எஸ்.தோனி (M.S.Dhoni) இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவருக்கு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு உள்ளது.
விரேந்தர் சேவாக்
இந்திய கிரிக்கெட்டின் அதிரடி ஜாம்பவானான விரேந்தர் சேவாக் (Virender Sehwag) இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ஏனெனில், இவருக்குதான் மிக அதிக விலையிலான ஆடம்பர பங்களா உள்ளது. டெல்லி நகரில் உள்ள இவரின் ஆடம்பர பங்களாவின் மதிப்பு ரூ.130 கோடி ஆகும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan