இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

11 ஐப்பசி 2025 சனி 15:44 | பார்வைகள் : 171
இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், நாட்டில் தங்கத்தின் விலை 5,000 ரூபாவால் உயர்ந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 310,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், நேற்று (10) இது 305,300 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
அதேவேளை, 24 கரட் தங்கத்தின் விலை நேற்று 330,000 ரூபாவாக இருந்தது.
இவ்வாறான நிலையில், இன்று 335,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.