சினிமாவில் விஜய் இடத்தை நிரப்பப்போவது யார்?
11 ஐப்பசி 2025 சனி 15:21 | பார்வைகள் : 711
சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். அவர் தன்னுடைய கெரியரின் உச்சத்தில் இருக்கும்போதே சினிமாவை உதறித்தள்ளிவிட்டு அரசியலுக்குள் நுழைகிறார். விஜய்யின் விலகலால் சினிமாவில் அவர் இடத்தை பிடிக்கப்போவது யார் என்கிற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது. ஒரு சிலரோ விஜய்யின் இடத்தை பிடிக்க தகுதியானவர் சிவகார்த்திகேயன் என கூறுகின்றனர். இதன்காரணமாகவே அவரை திடீர் தளபதி என்றும் அழைத்து வருகின்றனர். இந்த நிலையில், விஜய்யின் இடத்தை நிரப்பப்போவது யார் என்பது பற்றிய கேள்விக்கு பிரதீப் ரங்கநாதன் அளித்துள்ள பதில் கவனம் பெற்றுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் புரமோஷன் பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொண்ட பிரதீப் ரங்கநாதனிடம், விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டார். அவர் இடத்தை யார் நிரப்ப போகிறார்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், யாருமே அவரது இடத்தை நிரப்ப முடியாது. அவர் இன்று இந்த அளவு உச்சத்தை தொட்டதற்கு பின்னால் 30 வருட உழைப்பு இருக்கிறது என பிரதீப் கூறி உள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், விஜய்யோ, அஜித்தோ, ரஜினியோ இன்று இவ்வளவு சக்சஸ்ஃபுல்லான ஸ்டார் ஆகி இருக்கிறார்கள் என்றால் அதற்கு ரசிகர்கள் தான் முக்கிய காரணம். ஸ்கிரிப்டெல்லாம் காரணம் இல்லை. அடுத்த 30 வருடத்தில், பார்க்கலாம், யார் அந்த உயரத்தை தொடுகிறார்கள் என்று, அதுவும் ரசிகர்களால் தான் தீர்மானிக்கப்படும் என ஸ்மார்ட் ஆக பதிலளித்து இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். அவர் நடித்த டியூட் படம் அக்டோபர் 17ந் தேதி திரைக்கு வர உள்ளது.
பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படத்தை கீர்த்தீஸ்வரன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து உள்ளார். அவர் இசையமைக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும். கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான பல்டி படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார் சாய் அபயங்கர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan