Paristamil Navigation Paristamil advert login

அல்ஸீமர் நோயில் பாதிக்கப்பட்ட மனைவியை சுட்டுக்கொன்ற கணவர் - தற்கொலை!!

அல்ஸீமர் நோயில் பாதிக்கப்பட்ட மனைவியை சுட்டுக்கொன்ற கணவர் - தற்கொலை!!

10 ஐப்பசி 2025 வெள்ளி 08:05 | பார்வைகள் : 2330


Sinceny எனும் சிறு கிராமத்தில் வசிக்கும் 69 வயதுடைய நபர் ஒருவர் அவருடைய மனைவியை சுட்டுக்கொன்றுவிட்டு, தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளார்.

இந்த துயர சம்பவம் Aisne நகரில் இந்த வாரம் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் புதன்கிழமை காலை அங்குள்ள வீடொன்றில் இருந்து இருவரது சடலங்களை காவல்துறையினர் மீட்டனர். 74 மற்றும் 69 வயதுடைய  தம்பதியினர் இருவரது சடலங்களே அவையாகும்.

அல்ஸீமர் நோயினால் பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமாக இருந்த மனைவியை வேட்டைத்துப்பாக்கியினால் சுட்டுக்கொன்றுவிட்டு, கணவர் அதே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்துள்ளார்.

அவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இச்செயலில் ஈடுபட்டுள்ளார். இச்செயலுக்கான தாம் அயலவர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும், மனைவி அனுபவிக்கும் துயரத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் மிகவும் உருக்கமாக கடிதம் எழுதி வைத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்