தனுஷின் ‘D56’ பட கதாநாயகி யார்?

9 ஐப்பசி 2025 வியாழன் 16:49 | பார்வைகள் : 223
தனுஷ் நடிப்பில் அண்மையில் ‘இட்லி கடை’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து வருகின்ற நவம்பர் மாதம் தனுஷ் நடித்துள்ள ‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இது தவிர தனுஷ் ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனது 56வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ். ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் இந்த கூட்டணியின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. தற்காலிகமாக D56 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
படத்தின் அறிவிப்பு போஸ்டரை பார்க்கும்போது ஹாரர் திரில்லர் ஜானரில் இப்படம் எடுக்கப்படுவது போல் தெரிகிறது. மேலும் ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைக்கப் போகிறார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படம் தொடர்பான கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க இருக்கிறாராம்.
அடுத்தது இந்த படத்தின் படப்பிடிப்பு 2026 பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் எனவும் இந்த படத்தின் சில காட்சிகளை காட்டுப்பகுதியில் படமாக்க படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தனுஷின்மேலும் நடிகை சாய் பல்லவி, தனுஷுடன் இணைந்து ஏற்கனவே ‘மாரி 2’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.