Paristamil Navigation Paristamil advert login

இனி காலனி என்ற பெயர் இருக்காது :தெருக்களின் ஜாதி பெயர்களும் மாற்றம்

இனி காலனி என்ற பெயர் இருக்காது :தெருக்களின் ஜாதி பெயர்களும் மாற்றம்

9 ஐப்பசி 2025 வியாழன் 04:25 | பார்வைகள் : 164


தீண்டாமைக்கான வசை சொல்லாக, காலனி என்ற சொல் இருப்பதால், அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படவுள்ளது. அத்துடன், சாலைகள், தெருக்கள் பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களும் நீக்கப்படும் என, தமிழக அரசு அர சாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து, தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்ட அரசாணை:

தமிழக அரசு, ஜாதி, மதம், பாலினம், செல்வம், அதிகாரம் போன்ற வேறு பாடு இல்லாத, சம வாய்ப்புகள் கொண்ட, சமூக அமைப்பை நோக்கி, பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறது .

அந்த வகையில், 'ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும், வசை சொல்லாகவும் மாறியிருப்பதால், 'காலனி' என்ற சொல், அரசு ஆவணங்களில் இருந்தும், பொது பழக்கத்தில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஏப்.,29ம் தேதி அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, தலைமைச் செயலர் தலைமையில், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகள் உள்ளிட்டவற்றில் ஜாதி பெயர்களை நீக்குதல், மறு பெயரிடுதல் தொடர்பாக, ஏப்., 1 மற்றும் மே 19ம் தேதிகளில் ஆய்வு கூட் டம் நடத்தப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவினரை இழிவுப்படுத்தும் வகையில் உள்ள, ஜாதி பெயர் களை நீக்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதை பின்பற்றி, குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது உள்கட்டமைப்புகளில் உள்ள ஜாதி பெயர்களை நீக்குதல் அல்லது மறுபெயரிடுதல் பணியை துவங்க வேண்டும்.

இவற்றை, வருவாய் நிர்வாக ஆணையர், சென்னை மாநகராட்சி கமிஷனர், நகராட்சி நிர்வாக இயக்குநர், பேரூராட்சிகளின் இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர்கள், குறிப் பிட்ட காலவரம்பிற்குள் செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்