காய்ச்சல் தொற்றினால் 17,000 மரணங்கள் பதிவு!!

8 ஐப்பசி 2025 புதன் 17:30 | பார்வைகள் : 586
காய்ச்சல் தொற்றினால் பிரான்சில் கடந்த குளிர்காலத்தில் 17,000 மரணங்கள் பதிவானதாக பிரெஞ்சு பொது சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
வருடத்துக்கு சராசரியாக காய்ச்சல் தொற்றின் காரணமாக 10,000 பேர் வரை இறக்கும் நிலையில், சென்ற 2024 ஆம் ஆண்டு குளிர் காலத்தில் மட்டும் 17,600 பேரின் சாவுக்கு இந்த காய்ச்சல் காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. “மிக கணிசமான மற்றும் தீவிரமான அதிகரிப்பு” என பொது சுகாதாரத்துறையின் இயக்குனர் தெரிவித்தார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதாகவும், 54% சதவீதமானவர்களே தடுப்பூசி போட்டுக்கொள்ளுவதாகவும், இந்த எண்ணிக்கை கட்டாயமாக அதிகரிக்கப்படவேண்டும் எனவும், தடுப்பூசி போட்டுக்கொள்ளுவது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1