Paristamil Navigation Paristamil advert login

நமது உடலில் நல்ல பாக்டீரியா என்னென்ன வேலைகள் செய்கின்றன?

நமது உடலில் நல்ல பாக்டீரியா என்னென்ன வேலைகள் செய்கின்றன?

8 ஐப்பசி 2025 புதன் 17:36 | பார்வைகள் : 165


நமது உடல் ஆரோக்கியத்திற்கும் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டிற்கும் நல்ல பாக்டீரியாக்கள் மிகவும் அவசியம். இவை கெட்ட பாக்டீரியாக்களை தடுத்து, நோய்த்தொற்றுகளிலிருந்து உடலை பாதுகாக்கின்றன. குடலில் உள்ள இந்த பாக்டீரியாக்களே ஆரோக்கியத்திற்கான அடிப்படை என்று ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

நாம் உண்ணும் உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு ஆகியவை குடலால் உறிஞ்சப்படுவதே உடலுக்கு தேவையான முக்கியமான செயலாகும். இருப்பினும், தவறான உணவு பழக்கங்களே ஆரோக்கியத்திற்கு முதல் அச்சுறுத்தலாக அமைகின்றன:

குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தான் இத்தகைய பாதிப்புகளிலிருந்து உடலை பாதுகாக்கின்றன.சருமம், வாய், கண், மூக்கு மற்றும் பெண்ணுறுப்புகள் போன்ற உடலின் நுழைவுப் பகுதிகள் அனைத்திலும் நல்ல பாக்டீரியாக்கள் அமைந்துள்ளன. இவை வெளியே இருந்து நுழையும் நோய்க்கிருமிகளுக்கு எதிராக முதல் தடுப்பு சுவராக பணியாற்றுகின்றன.

குறிப்பாக, பெண்களின் யோனி பகுதியில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் உருவாக்கும் அமிலத்தன்மை, கர்ப்பப்பைக்குள் தொற்றுக்கள் நுழைவதை தடுத்து, முக்கிய பாதுகாப்பை வழங்குகின்றன.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்