கவினுக்கு ஜோடியான நயன்தாரா….
8 ஐப்பசி 2025 புதன் 17:36 | பார்வைகள் : 729
கவின் நடிப்பில் சமீபத்தில் ‘கிஸ்’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இது தவிர கவின், வெற்றிமாறன் தயாரிப்பில் ‘மாஸ்க்’ எனும் படத்தில் நடித்துள்ளார்.
அடுத்தது ‘கவின் 09’ எனும் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர், விஷ்ணு எடாவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா, கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார். காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் பிரபு, ராதிகா சரத்குமார், பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலரும் நடிக்கின்றனர்
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, ரௌடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. ஜென் மார்டின் இதற்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படக்குழு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதாவது இரண்டு விதமான பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே வெளியான தகவலின்படி இந்த படத்திற்கு ஹாய் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan