Paristamil Navigation Paristamil advert login

மும்பை தாக்குதலுக்கு பிறகு ராணுவ நடவடிக்கை எடுப்பதை தடுத்தது யார்:பிரதமர் கேள்வி

மும்பை தாக்குதலுக்கு பிறகு ராணுவ நடவடிக்கை எடுப்பதை தடுத்தது யார்:பிரதமர் கேள்வி

9 ஐப்பசி 2025 வியாழன் 06:26 | பார்வைகள் : 101


கடந்த 2008 ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ராணுவ நடவடிக்கை எடுப்பதை தடுத்தது யார் என்பதை காங்கிரஸ் கட்சி விளக்க வேண்டும் என மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கடந்த 2008 ம் ஆண்டு நவ., 26 ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 175 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் பதவியேற்றார்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஏன் பதிலடி கொடுக்கவில்லை என்பது குறித்து பேட்டி கொடுத்து இருந்தார். சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்ததாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், நவி மும்பை விமான நிலையத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ராணுவ நடவடிக்கை எடுப்பதை ஒரு நாடு தடுத்ததாக காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்தவர் கூறியுள்ளார். இது குறித்து காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும்.

காங்கிரசின் பலவீனம் பயங்கரவாதிகளுக்கு பலமாக மாறியது. இந்த தாக்குதலுக்கு பிறகு ராணுவ நடவடிக்கை எடுப்பதை தடுத்தது யார் என்பதை தெரிந்து கொள்ள நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளது. எங்களை பொறுத்தவரை தேசம் மற்றும் மக்களின் பாதுகாப்பை தவிர வேறு எதுவும் முக்கியம் இல்லை. வளர்ந்த பாரதம் என்பதன் கொள்கை, வளர்ச்சி மற்றும் வேகம் என்பது ஆகும்.சில தலைவர்கள் வளர்ச்சியை விட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். திட்டங்களுக்கு தடை ஏற்படுத்துவதுடன் அவர்கள் ஊழலிலும் ஈடுபடுகின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்