டெஸ்லாவின் 2 புதிய மலிவு விலை கார்கள் அறிமுகம்
8 ஐப்பசி 2025 புதன் 11:51 | பார்வைகள் : 856
“Model Y” மற்றும் “Model 3” என்ற இரண்டு மலிவு விலை மாடல் கார்களை டெஸ்லா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா .இன்க் நிறுவனம் தங்களது பிரபலமான “Model Y” மற்றும் “Model 3” மாடல் எலக்ட்ரிக் கார்களின் குறைந்த விலை புதிய ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மலிவு விலை டெஸ்லா கார்களானது தற்போது அமெரிக்காவில் உள்ள டெஸ்லா இணையதளங்களில் முன்பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Model Y-யின் Standard Rear-Wheel Drive வேரியண்ட் $39,990-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதைப்போல Model 3 Standard Rear-Wheel Drive வேரியண்ட் $36,990-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
69 kWh பற்றரி திறன் கொண்ட இந்த இரண்டு புதிய வேரியண்ட்-களும் ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 517 கி.மீ பயணிக்க கூடியது.
இந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார்களில் 8 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆனால் முழுமையான Full Self-Driving அம்சம் இதில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மலிவு விலை கார்கள் குறித்த அறிவிப்பு வெளியானதை அடுத்து டெஸ்லா நிறுவனத்தின் பங்கு சுமார் 2.70% சரிவைக் கண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan