Paristamil Navigation Paristamil advert login

வங்கிக்கட்டணங்கள் 3.1% சதவீதத்தால் அதிகரிப்பு!!

வங்கிக்கட்டணங்கள் 3.1% சதவீதத்தால் அதிகரிப்பு!!

8 ஐப்பசி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 607


வங்கி செயற்பாடுகளுக்கான கட்டணன்ம் 3.1% சதவீதத்தால் அதிகரித்துள்ளது. வங்கிக்கணக்கை பராமரிப்பதற்காக அறவிடப்படும் கட்டணமும் அதிகரித்துள்ளது.

இந்த 2025 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இந்த கட்டணம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த கொவிட் 19 காலத்தில் ஏற்பட்ட பணவீக்கத்தின் போது அறவிடப்பட்ட கட்டணங்களை விட இது அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பராமரிப்புக்கட்டணம் 8.95% சதவீதத்தால் அதிகரித்துள்ளது. பயனாளர் ஒருவரிடம் இருந்து ஆண்டுக்கு 12 யூரோக்களுக்கு குறையாமல் கட்டணம் அறவிடப்படுவதாகவும், வங்கி, நிதி நிறுவனங்கள் என மொத்தமாக 101 நிறுவனங்களில் 99 நிறுவனங்கள் இந்த கட்டணங்களை அதிகரித்துள்ளன.

வங்கிக்கட்டண ஆய்வகம் (l'Observatoire des tarifs bancaires ) இத்தகவலை வெளியிட்டுள்ளது.  தகவல் சேமிப்பு மற்றும் மனித வேலைப்பழு அதிகரித்துள்ளதால் இந்த கட்டணங்கள் தவிர்க்கமுடியாததாக மாறுகிறது என l'Observatoire des tarifs bancaires  தெரிவிக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்