Paristamil Navigation Paristamil advert login

சிம்பு - வெற்றிமாறன் இணையும் STR 49 படத்தின் தலைப்பு இதுவா?

சிம்பு - வெற்றிமாறன் இணையும் STR 49 படத்தின் தலைப்பு இதுவா?

7 ஐப்பசி 2025 செவ்வாய் 15:51 | பார்வைகள் : 179


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான தக் லைஃப் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள சிம்பு, தன்னுடைய அடுத்த படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் உடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது நடிகர் சிம்புவின் 49வது படமாகும்.

சிம்பு - வெற்றிமாறன் இணையும் படம் என்பதால் இதற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்திற்கு என்ன டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘அரசன்’ என பெயரிடப்பட்டு உள்ளதாக அறிவித்து உள்ளனர். வட சென்னை யூனிவர்சில் தான் இப்படம் உருவாகிறது. வட சென்னையில் தனுஷ் அன்பு என்கிற கேரக்டரில் நடித்திருந்த நிலையில், சிம்பு இப்படத்தில் அரசன் ஆக நடித்திருக்கிறார்.

வட சென்னை கதைக்களம் என்பதால், வட சென்னை படத்தில் நடித்த ஏராளமான நடிகர், நடிகைகள் சிம்புவின் அரசன் படத்திலும் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்காக நடிகர் தனுஷிடம் முறைப்படி அனுமதி வாங்கி தான் வட சென்னை யூனிவர்ஸை உருவாக்கி இருக்கிறார் வெற்றிமாறன். ஏனெனில் வடசென்னை படத்தின் உரிமம் தனுஷிடம் தான் உள்ளது. அவர் தான் அப்படத்தை தயாரித்து இருந்தார். சிம்பு படத்தை முடித்த பின்னர் வட சென்னை இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன். அப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

சிம்புவின் அரசன் திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பதை படக்குழு சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறது. நடிகை சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவர் ஓகே சொன்னால், சிம்புவுக்கு ஜோடியாக அவர் நடிக்கும் முதல் படமாக இது அமையும். அதேபோல் இப்படத்திற்கு இசையமைக்கப்போவது யார் என்பதையும் சீக்ரெட்டாகவே வைத்திருக்கிறார்கள். அனிருத், சந்தோஷ் நாராயணன் மற்றும் ஜீவி பிரகாஷ் ஆகிய மூவரில் ஒருவர் தான் இசையமைக்க உள்ளார். அது யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்