இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்; கணித்துச் சொன்னது உலக வங்கி!
8 ஐப்பசி 2025 புதன் 06:08 | பார்வைகள் : 1494
2026ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்” என உலக வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2026ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும். உலகின் மிகவும் வேமாக வளர்ந்து வரும் முக்கியமான பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து இருக்கிறது.
வலுவான நுகர்வோர் வளர்ச்சி, மேம்பட்ட வேளாண்மை உற்பத்தி, கிராமப்புற ஊதிய வளர்ச்சி ஆகியவை இதற்கு முக்கிய காரணம். வங்கதேசத்தின் வளர்ச்சி 4.8 சதவீதமாகவும், பூடானின் வளர்ச்சி 7.3 சதவீதமாகவும், மாலத்தீவின் வளர்ச்சி 3.9 சதவீதமாகவும், நேபாளத்தின் வளர்ச்சி 2.1 சதவீதமாகவும் இருக்கும்.
இந்திய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா விதித்த 50% வரிகள் வரும் ஆண்டில் நாட்டிற்கு தாக்கங்களை ஏற்படுத்தும். 2026-27ம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.3 சதவீதமாக குறையும். உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, குறிப்பாக விவசாய உற்பத்தி மற்றும் கிராமப்புற ஊதிய வளர்ச்சி, எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளன.
தெற்காசியாவின் வளர்ச்சி 2025ம் ஆண்டில் 6.6 சதவீதத்தில் இருந்து, 2026ம் ஆண்டில் 5.8 சதவீதமாக குறையும். பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026ம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என கடந்த ஜூன் மாதம் உலக வங்கி கணித்திருந்த நிலையில் தற்போது 6.5 சதவீதமாக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan