ஒக்டோபர் 7 : பரிசில் தற்காலிக நினைவுத்தூபி!!
7 ஐப்பசி 2025 செவ்வாய் 14:10 | பார்வைகள் : 1514
ஒக்டோபர் 7 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூருவதற்காக பரிசில் தற்காலிக நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது.
Place des Vosges பகுதியில் இந்த தூபி ஒக்டோபர் 6, நேற்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் ஆயுதக்குழுவின் தாக்குதலில் 1,219 பேர் கொல்லப்பட்டிருந்தனர். பலர் பணயக்கையிகளாக பிடித்துச் செல்லப்பட்டிருந்தனர்.
கொல்லப்பட்டவர்களின் நினைவாக, அவர்களுக்கு அஞ்சலி செலுத்த இந்த தூபி அமைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இது தற்காலிகமானது எனவும், விரைவில் நிரந்தமாக ஒரு இடம் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் ஏராளமான பொதுமக்கள் அங்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan