Paristamil Navigation Paristamil advert login

சமூகத்தில் மதிப்பில்லை! - விரக்தியில் ஆசிரியகள்!! ”

சமூகத்தில் மதிப்பில்லை! - விரக்தியில் ஆசிரியகள்!! ”

7 ஐப்பசி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 551


பிரான்சில் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்கள் தங்களுக்கு சமூகத்தில் மதிப்பில்லை என தெரிவிக்கின்றனர். பிரெஞ்சு ஆசிரியர்களில் வெறுமனே 4% சதவீத ஆசியர்கள் மட்டுமே சமூகத்தில் மதிக்கப்படுவதாக உணருவதாக தெரிவிக்கின்றனர்.

55 நாடுகளில் இருந்து 280,000 ஆசிரியர்களை கொண்டுள்ள சர்வதேச l'Organisation de coopération et de développement économiques (OCDE)  அமைப்பு மேற்கொண்ட கருத்தாய்வில் இது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை மேற்கொள்ளப்படும் கருத்துக்கணிப்பில், இவ்வருடம் முன்னர் எப்போதும் இல்லாத அளவு ஆசிரியர்கள் மிக மோசமாக மற்றும் விரக்தி நிலமையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2018 ஆம் ஆண்டில் 45% சதவீதமான ஆசிரியர்கள் இந்த சூழ்நிலையில் இருந்ததாகவும், தற்போது 96% சதவீதமான ஆசிரியர்கள் இந்த விரக்தி நிலையில் இருப்பதாகவும் அதிர்ச்சியூட்டும் முடிவு வெளியாகியுள்ளது.

ஆசிரியர்கள் நன்றாக பயிற்சிவிக்கப்படவில்லை எனவும், தற்போதைய நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்றால் போல் ஆசிரியர்கள் தயாராகவில்லை எனவும், தங்கள் மீதான மதிப்பு வீழ்ச்சிக்கு அது காரணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரான்சில் வெறுமனே 9% சதவீதமான ஆசிரியர்கள் மட்டுமே செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது தொடர்பில் அறிவுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வர்த்தக‌ விளம்பரங்கள்