Paristamil Navigation Paristamil advert login

புதிய அமைச்சர்களின் நியமனம் செல்லுமா? பதவி தொடருமா?

புதிய அமைச்சர்களின் நியமனம் செல்லுமா? பதவி தொடருமா?

6 ஐப்பசி 2025 திங்கள் 14:02 | பார்வைகள் : 661


புதிதாக நியமிக்கப்பட்ட செபஸ்தியன் லெகோர்னுவின் அரசாங்கம் வெறும் சில மணி நேரத்தில் விழுந்தது. அவரும், அவருடன் நியமிக்கப்பட்ட அமைச்சர்களும் தற்போது "ராஜினாமா செய்த அமைச்சர்கள்" எனக் கருதப்படுகிறார்கள். 

அரசியல் நிபுணர்களின்  கூற்றுப்படி, ஞாயிறன்று வெளியான நியமன ஆணைதான் சட்டபூர்வமானது. எனவே, இந்த குறுகிய கால அரசாங்க உறுப்பினர்களே தற்போதைய பதவியில் இருப்பவர்களாக இருக்கின்றனர். அவர்கள் மூன்று மாத ஊதியம் உட்பட முன்னாள் அமைச்சர்களுக்கான நலன்களைப் பெற தகுதி பெறுகிறார்கள்.

தற்காலிகமாக, இந்த அரசு சாதாரண நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்கிறது. புதிய அமைச்சர்களாக Bruno Le Maire (பாதுகாப்பு), Roland Lescure (பொருளாதாரம்), Eric Woerth (வீடமைப்பு) ஆகியோர் உள்ளனர். முந்தைய அமைச்சரவை உறுப்பினர்களில் ஜெரால்ட் தர்மானின் (நீதித்துறை), புருனோ ரெத்தையோ (உள்துறை), ரச்சிதா டாட்தி (கலாசாரம்) ஆகியோர் தொடர்ந்தும் பதவியில் உள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்