இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய துடுப்பாட்ட மற்றும் சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளர்கள் !
6 ஐப்பசி 2025 திங்கள் 08:16 | பார்வைகள் : 1105
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) தேசிய கிரிக்கெட் அணிக்கு இரு முக்கியப் பயிற்சியாளர்களை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.
அந்த வகையில், துடுப்பாட்ட பயிற்சியாளராக ஜூலியன் வூட் நியமிக்கப்பட்டுள்ளதுடன், சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராக ரெனே ஃபெர்டினாண்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
துடுப்பாட்டப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள, ஜூலியன் வூட், க்கு ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், ஓராண்டு காலத்திற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
"பவர் ஹிட்டிங் திட்டத்தை" (Power Hitting Program) உருவாக்கியவர் வூட். இவர் துடுப்பாட்ட நுட்பங்களை நவீன பயிற்சி முறைகள் மற்றும் உயிரியக்கவியல் (Biomechanics)உடன் ஒருங்கிணைத்து வீரர்களின் துடுப்பாட்டத் திறனை (Hitting Power) அதிகரிக்கச் செய்வதில் சிறந்தவர் .
சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள, ரெனே ஃபெர்டினாண்ட்ஸ் இன் நியமனம் செப்டம்பர் 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.
மணிக்கட்டு மற்றும் விரல் சுழற்பந்து இரண்டிலும் நிபுணத்துவம் பெற்ற ரெனே ஃபெர்டினாண்ட்ஸ், இதற்கு முன்னர் நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு (NZC)உயிரியக்கவியல் ஆலோசகராகவும் (Biomechanics consultant)பணியாற்றியுள்ளார்.
அங்கு அவர் முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு செயல்திறன் மதிப்பீடுகள் (Performance evaluations) மற்றும் உபாதை அபாய மதிப்பீடுகளை(Injury-risk assessments) மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan