Essonne : சாரதியை துரத்திச் சென்ற ஜொந்தாமினர் மூவர் காயம்..!!

5 ஐப்பசி 2025 ஞாயிறு 13:15 | பார்வைகள் : 369
சாரதி ஒருவரை துரத்திச் சென்ற ஜொந்தாம் வீரர்கள் மூவர் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளனர்.
ஒக்டோபர் 4 ஆம் திகதி நேற்று சனிக்கிழமை இரவு இச்சம்பவம் Fleury-Mérogis (Essonne) நகர்ப்பகுதியில் இடம்பெற்றது. மகிழுந்தில் பயணித்த சந்தேகத்துக்கிடமான சாரதி ஒருவரை ஜொந்தாமினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் அவர் மகிழுந்தை நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்துள்ளார்.
ஜொந்தாமினரிடம் இருந்து தப்பி மகிழுந்தை A6 நெடுஞ்சாலையில் செலுத்தி அதிவேகமாக பயணித்துள்ளார். அவரை துரத்திச் சென்ற ஜொந்தாமினர், பிறிதொரு மகிழுந்தில் மோதி விபத்துக்குள்ளாகினர்.
இதில் மூன்று ஜொந்தாமினரும் காயமடைந்தனர்.
விசாரணைகளை ஆரம்பித்த தேசிய ஜொந்தாமினர், தப்பி ஓடிய சாரதியை தேடி வருகின்றனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1