Paristamil Navigation Paristamil advert login

புயலில் சிக்கி இருவர் பலி!!

புயலில் சிக்கி இருவர் பலி!!

5 ஐப்பசி 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 490


நேற்று ஒக்டோபர் 4, சனிக்கிழமை நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளை புயல் தாக்கியிருந்தது. இதில் இருவர் பலியாகியுள்ளனர்.

Étretat (Normandie)  நகரில் 48 வயதுடைய ஒருவர் பலியாகியுள்ளார். 25 வயதுடைய ஒருவர்  Aisne நகரில் பலியாகியுள்ளார். குறித்த இரு மாவட்டங்களுக்கும் நேற்று புயல் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.  மணிக்கு 140 கி.மீ வேகம் வரை புயல் பதிவாகியிருந்தது.

Étretat (Normandie)  நகரில் குறித்த 48 வயதுடைய நபர் நீச்சலில் ஈடுபட்டிருந்ததாகவும், புயல் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவரை மீட்கும் பணி மிகவும் சிரமத்துக்கு மத்தியில் இடம்பெற்றதாகவும், இருந்தபோதும் அவரை மீட்க முடியவில்லை எனவும், மாலை 4 மணி அளவில் அவரது சடலம் கரை ஒதுங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, இரண்டாவது சம்பவம் Aisne நகரில் பதிவானது. 25 வயதுடைய சாரதி ஒருவர் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்து அவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய நாளில் ஆறு மாவட்டங்களுக்கு புயல் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

வர்த்தக‌ விளம்பரங்கள்