உக்கிரேனில் பிரெஞ்சு புகைப்படப் பத்திரிகையாளர் ட்ரோன் தாக்குதலில் உயிரிழப்பு!!

4 ஐப்பசி 2025 சனி 15:28 | பார்வைகள் : 348
உக்கிரைன் நாட்டில் டொன்பாஸ் (Donbass) பகுதியில் ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் பிரெஞ்சு புகைப்பட பத்திரிகையாளர் அன்டோனி லாலிக்கன் (Antoni Lallican) கொல்லப்பட்டதை தொடர்ந்து, புகைப்படக் கலைஞர் பாட்ரிக் சோவேல் (Patrick Chauvel) துயரத்துடன் எதிர்வினை தெரிவித்துள்ளார்.
"ட்ரோன்கள் என்பது புதிய வகை ஆபத்து; இதை முந்தைய போர்களில் நாம் சந்திக்கவில்லை. இப்போது நாமே இலக்காக இருக்கிறோம்," என அவர் தெரிவித்துள்ளார். இந்த போர் பழைய யுத்த முறையில் தொடங்கி, தற்போது ட்ரோன்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் முடிகிறது என அவர் கூறியுள்ளார்.
"ஒருவேளை நாமும் ட்ரோன்களில் கேமரா வைக்க வேண்டிய நிலைக்கு வரலாம்," என்று சோவேல் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இது ஒரு ஆபத்தான தொழில் என்பதை ஏற்றுக்கொண்டும், உண்மையை வெளிக்கொணர கட்டாயம் தேவை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அன்தோனி லாலிக்கன் தனது வேலையை நன்றாக செய்த ஒரு பாசமுள்ள இளைஞர் என்று சோவேல் அவரை நெகிழ்வுடன் நினைவுகூரினார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1