கர்ப்பிணி ஆசிரியர் மீது வன்முறை: மாணவி காவலில், பாடசாலையில் வெற்று நாள்!!

3 ஐப்பசி 2025 வெள்ளி 23:31 | பார்வைகள் : 300
மோ (Meaux) நகரத்தில் உள்ள ஒரு உயர்தர பாடசாலையில், 15 வயதான மாணவி ஒருவர், 6 மாதக் கர்ப்பமாக உள்ள பிரெஞ்கர்ப்பிணி ஆசிரியர் மீது வன்முறை: மாணவி காவலில், பாடசாலையில் வெற்று நாள்!!சு ஆசிரியையை வயிற்றில் முழங்கையால் தாக்கியதாகக் கூறப்படுகிறாள்.
பாடசாலை வளாகத்தில் ஏற்பட்ட இந்த தகராறுக்குப் பிறகு, மாணவி 30 மணி நேரத்துக்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டுள்ளார். மாணவியின் தாய் மற்றும் பாட்டி பாடசாலைக்குள் நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்; பாட்டி மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காயமடைந்த ஆசிரியைக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பள்ளி சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் "வெற்று நாள்" (Journée blanche) அனுஷ்டித்து, மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். கல்வி மண்டல அதிகாரிகள் தாக்குதலை கண்டித்து, ஆசிரியைக்கு உடனடி பாதுகாப்பு வழங்கப்பட்டது. காவல் நீக்கப்பட்டாலும், விசாரணை தொடரும் என்றும், மாணவி ஒழுக்கக் குழுவின் முன்னிலையில் நிறுத்தப்படுவாள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1