Paristamil Navigation Paristamil advert login

தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

4 ஐப்பசி 2025 சனி 08:12 | பார்வைகள் : 100


கரூர் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுக்களை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

கரூரில் நடந்த தவெக தலைவர் விஜயின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த துயர சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் முன்ஜாமீன் கோரியும் மனுத் தாக்கல் செய்தனர். கரூர் சம்பவம் தொடர்பான இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, இருவருக்கும் முன்ஜாமின் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று மாலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி பொதுச்செயலர் ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். விசாரணை துவக்க நிலையிலேயே உள்ளது. இதனால் முன்ஜாமின் வழங்க முடியாது. மூத்த ஐபிஎஸ் அதிகாரியை கொண்டு சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்