பெர்லின் சுவர் இடிப்பு நினைவேந்தல்! - மக்ரோன் ஜேர்மனி செல்கிறார்!!

3 ஐப்பசி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 370
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ஒக்டோபர் 3, இன்று வெள்ளிக்கிழமை ஜேர்மனி செல்கிறார். சோவியட் யூனியனின் வீழ்ச்சி என கருதப்படும் பனிப்போரின் சின்னமாக அமைக்கப்பட்ட ‘பெர்லின் சுவர்’ இடிப்பு நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ள அவர் அங்கு பயணிக்கிறார்.
கிழக்கு ஜேர்மனியையும் - மேற்கு ஜேர்மனியையும் இரண்டாக பிரித்து நடுவே கட்டப்பட்ட சுவர், 28 ஆண்டுகளாக இரு பகுதி மக்களையும் பிரித்து வைத்திருந்த வரலாறு அறிந்ததே. அதன் பின்னர் 19989 ஆம் ஆண்டு முற்றாக இடிக்கப்பட்டது.
அதன் 35 ஆம் ஆண்டு நினைவாக இன்று ஜேர்மனியில் நிகழ்வு கடைப்பிடிக்கப்படுகிறது. அதில் கலந்துகொள்ள மக்ரோன் இன்று காலை பயணிக்கிறார்.
பிரெஞ்சு எல்லையில் உள்ள ஜேர்மனியின் கிராமமான Saarbrücken நகரில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற உள்ளது. ஜேர்மனியில் இன்று “Tag der Deutschen Einheit” எனப்படும் (ஜேர்மனியின் ஒற்றுமைக்கான நாள்) விடுமுறைநாளாகும்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1