Paristamil Navigation Paristamil advert login

மாறும் காலநிலையால் அதிகரிக்கும் வெள்ள அபாயம்: Île-de-Franceஇன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!!

மாறும் காலநிலையால் அதிகரிக்கும் வெள்ள அபாயம்: Île-de-Franceஇன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!!

2 ஐப்பசி 2025 வியாழன் 22:29 | பார்வைகள் : 289


அக்டோபர் 13 முதல் 17 வரை, Île-de-France பகுதியில் ஒரு பெரும் வெள்ளம் ஏற்பட்டால் ஏற்படும் விளைவுகளை எதிர்நோக்கி HYDROS 25 என்ற மாபெரும் பயிற்சி நடக்கவுள்ளது. 

பரிஸ், Seine-Saint-Denis, Val-de-Marne உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் மத்தியில் FR-Alert எனப்படும் எச்சரிக்கை அமைப்பை சோதிக்கின்றனர். வெள்ளம் ஏற்பட்டால், 630,000 மக்கள் நேரடியாக பாதிக்கப்படலாம் என்பதுடன், மின்சாரம், குடிநீர், போக்குவரத்து போன்ற சேவைகள் துண்டிக்கப்படும் அபாயங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அக்டோபர் 13-ஆம் திகதி, பரிஸ் நகரின் IVe பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் 60 பேர் நேரடி பயிற்சி வடிவில் வெளியேற்றப்படுர். மேலும், Cité des Sciences et de l’Industrie-யில் Plouf 75 எனும் விழிப்புணர்வு கிராமம் அமைக்கப்படும், இதில் தீ விபத்து மீட்பு பயிற்சி மற்றும் சமூக ஆதரவு மையங்கள் மூலம் மக்கள் வெள்ள நேரத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை கற்றுக்கொள்வார்கள். இந்த பயிற்சிகள், மாறும் காலநிலையை முன்னிட்டு, பேரிடர்களை எதிர்கொள்ள பொதுமக்களை தயார்படுத்த முக்கிய நோக்கத்துடன் நடத்தப்படுகின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்