க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

2 ஐப்பசி 2025 வியாழன் 17:26 | பார்வைகள் : 129
க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது,
குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கடந்த செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் நிகழ்நிலையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி நிறைவடையும் எனவும், விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எந்த காரணங்களுக்காகவும் நீடிக்கப்படாது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
0112784208 / 0112784537/0112785922 / 0112784422
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1