Paristamil Navigation Paristamil advert login

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

2 ஐப்பசி 2025 வியாழன் 12:36 | பார்வைகள் : 782


யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அலுவலக மட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார  கருத்து தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு போதுமான நிதி, தமது அமைச்சிடம் இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குருக்கள்மடம் மனிதப் புதைகுழிக்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இதன்போது கூறினார்.

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அலுவலக மட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உரிய நடைமுறைகளை விரைவில் பூரணப்படுத்தி, தேவையான நிதியை வழங்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, மனிதப் புதைகுழி அகழ்வுக்கான நிதி விடயத்தில் எவ்வித சிக்கல்களும் இல்லை என ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

செம்மணி மற்றும் குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய பாதீடுகள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் துறைசார் திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்