Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் நிரந்தர கடைகள் திறப்பதாக Shein அறிவிப்பு : Galeries Lafayette கடுமையான எதிர்ப்பு!!!!

பிரான்சில் நிரந்தர கடைகள் திறப்பதாக Shein அறிவிப்பு : Galeries Lafayette கடுமையான எதிர்ப்பு!!!!

1 ஐப்பசி 2025 புதன் 21:25 | பார்வைகள் : 621


ஆசிய வலைத்தளமான Shein, உலகளவில் முதல் முறையாக, பிரான்சில் நிலையான ஆடைக் கடைகள் திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 

முதலில் கடை பரிசில் உள்ள BHV Marais-இல் நவம்பரில் திறக்கப்படுகிறது; பின்னர் Dijon, Reims, Grenoble, Angers மற்றும் Limoges நகரங்களில் உள்ள Galeries Lafayette-இல் கடைகள் திறக்கப்படவுள்ளது. 

இந்த திட்டத்தில், சென் மற்றும் Société des Grands Magasins (SGM) இணைந்து செயல்படுகின்றன. இது 200 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், நகர மையங்களை உயிர்ப்பிக்கும் முயற்சி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், சென் மீது நியாயமற்ற போட்டி, சுற்றுச்சூழல் மாசு, மற்றும் தொழிலாளர் சித்தாந்தங்களை மீறும் பழி சுமத்தப்பட்டுள்ளது. 

Galeries Lafayette இந்த கூட்டாண்மைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது, ஏனெனில் சென் நிறுவனத்தின் செயல்முறை தங்களின் மதிப்புகளுடன் முரணாக இருக்கிறது. இருப்பினும், SGM இந்த ஒப்பந்தம் சட்டபூர்வமானது எனவும், கலந்துரையாடல் தொடரும் எனவும் கூறியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்