குழந்தை பெற்ற பெண்களுக்கு ஓய்வூதிய கணக்கீட்டில் நன்மைகளா?

1 ஐப்பசி 2025 புதன் 20:25 | பார்வைகள் : 601
பிரான்ஸ் பிரதமர் செபாஸ்தியன் லெகோர்னு, தொழிற்சங்கங்களுக்கு எழுதிய கடிதத்தில், பெண்களின் ஓய்வூதியத்தில் முன்னேற்றம் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
சமூக பாதுகாப்பு நிதி மசோதையில், 2023 ஓய்வூதிய சீர்திருத்தத்த பரிந்துரைகளில், குறிப்பாக பெண்களுக்கு சாதகமாக மாற்றங்களைச் சேர்ப்பது குறித்து அவர் தெரிவித்துள்ளார். குழந்தை பெற்ற பெண்களுக்கு, ஓய்வூதிய கணக்கீட்டில் 25 ஆண்டுகளுக்கு பதிலாக 23 அல்லது 24 சிறந்த ஆண்டுகளை கணக்கில் எடுத்துக்கொள்வது போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, CGT ஒன்றியத்தின் தலைவர் சோபி பினே கடிதத்தை விமர்சித்து, இது எந்தக் கோரிக்கைகளுக்கும் பதிலல்ல என்றும், 2023 ஓய்வூதியச் சீர்திருத்தத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார். முன்னதாக நடைபெற்ற "conclave" பேச்சுவார்த்தைகள், தொழிற்சங்கங்கள் மற்றும் நிர்வாகம் இடையேயான முரண்பாடுகளால் தோல்வியடைந்தது.
புதிய பரிந்துரைகள் மூலம், பெண்களுக்கு ஓய்வூதியத்தில் நன்மைகள் கிடைக்கலாம் என அரசாங்கம் நம்புகிறது, ஆனால் தொழிற்சங்கங்கள் இன்னும் திருப்தியடையவில்லை.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1