நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த சர்கோசி – 20 வழக்கறிஞர்கள் நீதிமன்ற அவமதிப்பு புகார் !!

1 ஐப்பசி 2025 புதன் 17:06 | பார்வைகள் : 343
முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, தனக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத்தண்டனையை “சட்டத்தின் எல்லைகளை மீறுகிறது” என வெளிப்படையாக விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து சுமார் 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், “அவர் கூறியவை நீதித்துறை மீது அவமதிப்பும், குற்றமாகக் கருதப்பட வேண்டியவையும்” எனக் கூறி, பரிஸ் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
2007ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்காக லிபியாவிடம் இருந்து சட்டவிரோத நிதி பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி சர்கோசிக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், “பொய், சதி, அவமதிப்பு எதற்கும் நான் பயப்படமாட்டேன்” என அவர் சவால் விடுத்துள்ளார்.
இதேவேளை, தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு மரண மிரட்டல்கள் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “நீதித் தீர்ப்புகளை விமர்சிக்கலாம். ஆனால் மிரட்டல்கள் ஒருபோதும் ஏற்க படமாட்டாது” என்று அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1