ஆயுத பூஜை சுண்டல்

1 ஐப்பசி 2025 புதன் 16:09 | பார்வைகள் : 107
ஆயுத பூஜை என்றாலே சுண்டல் நிச்சயம் இருக்கும். அதற்கு வெறுமனே வேக வைத்து சமைப்பதை விட இப்படி சமைத்து பாருங்கள். வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இது அவர்களுக்கு புதிய சுவையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள் :
கருப்பு கொண்டைக்கடலை - 250 கிராம்
உப்பு - தே.அ
அரைக்க :
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சை மிளகா - 1
இஞ்சி - 1 துண்டு
கொத்தமல்லி - சிறிதளவு
தேங்காய் - 1/2 கப்
தாளிக்க :
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலி - சிறிதளவு
செய்முறை :
முந்தைய நாள் இரவே கொண்டைக்கடலையை ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
மறுநாள் அதை கழுவி குக்கரில் சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும். 5 விசில் வந்ததும் அணைத்துவிடுங்கள்.
பின் தண்ணீரை வடிகட்டி சுண்டலை தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருளை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு கடாய் வைத்து எண்ணெய் விட்டு அதில் கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் வேக வைத்த சுண்டல் மற்றும் அரைத்த விழுது சேர்த்து கிளறி விடுங்கள்.
அவ்வளவுதான் சுண்டல் தயார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1