Paristamil Navigation Paristamil advert login

ஒக்டோபர் 2 : வேலை நிறுத்தம்! - உச்சக்கட்ட பாதுகாப்பில் பரிஸ்!!

ஒக்டோபர் 2 : வேலை நிறுத்தம்! - உச்சக்கட்ட பாதுகாப்பில் பரிஸ்!!

1 ஐப்பசி 2025 புதன் 15:29 | பார்வைகள் : 498


நாளை ஒக்டோபர் 2 ஆம் திகதி இடம்பெற உள்ள தொழிலாளர் வேலை நிறுத்தத்தை அடுத்து, பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பில் கீழ் பரிஸ் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஜொந்தாமினர், தேசிய காவல்துறையினர் என மொத்தம் 5,000 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நாளை பிற்பகல் ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளதால், வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிற்பகல் 2 மணிக்கு Place d'Italie பகுதியில் ஆரம்பமாகும் ஆர்ப்பாட்டம்  Place Vauban ( Invalides அருகே) சென்று நிறைவடையும்.

என்றபோதும் முந்த இரு ஆர்ப்பாட்டங்கள் போன்று வீரியமான வேலை நிறுத்தமாகவோ,, ஆர்ப்பாட்டமாகவோ இருக்காது என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்