பிரெஞ்சு கடலில் இரஷ்ய கப்பல்! - அனுமதியை மீறி நுழைந்தது!!

1 ஐப்பசி 2025 புதன் 10:22 | பார்வைகள் : 364
சர்வதேச ஆங்கிலக்கால்வாயில் தொடர்ச்சியாக ரஷ்யாவின் கப்பல்கள் உளவுப்பணியில் ஈடுபட்டுவருகிறமை அறிந்ததே. இந்நிலையில், ரஷ்யாவின் கப்பல் ஒன்று எல்லையை மீறி பிரெஞ்சு கடற்பரப்புக்குள் நுழைந்துள்ளது.
செப்டம்பர் 29 ஆம் திகதி திங்கட்கிழமை, Saint-Nazaire (Loire-Atlantique) நகரில் உள்ள காற்றாலைப் பண்ணைக்கு அருகே இந்த கப்பல் வந்ததாகவும், ஆனால் இது ஒரு எண்ணைக்கப்பல் எனவும், இருந்தபோதும் பிரெஞ்சு அதிகாரிகள் இது தொடர்பாக வினாவியபோது கப்பலில் இருந்து பதிலளிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Brest மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் இது தொடர்பான விசாரணைகளை நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளது. ”அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க மறுப்பது!” என தெரிவிக்கப்பட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
244 மீற்றர் நீளமுடைய எண்ணைக் கப்பல் ரஷ்யாவின் Primorsk துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1