புதிய மாதம்.. புதிய மாற்றங்கள்!!

1 ஐப்பசி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 546
இன்று ஒக்டோபர் 1. புதிய மாதத்தில் பிரான்சில் பல புதிய மாறுதல்கள் நடைமுறைக்கு வருகின்றன. அவற்றைத் தொகுக்கிறது இந்த பதிவு.
● APL மீள் பரிசீலினை!!
APL எனப்படும் தனிப்பயனாக்கப்பட்ட வீட்டுவசதி உதவி ( les aides personnalisées au logement ) கொடுபனவுகள் மீள் பரிசோதனை செய்யப்பட உள்ளன. இன்று முதல் இந்த கொடுப்பனவு 1.04% சதவீதத்தால் அதிகரிக்க உள்ளது. 100 யூரோ இன்று முதல் €101.04 யூரோக்களாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த கொடுப்பனவு தானியங்கு முறையில் அதிகரிக்கும். பயனாளர்கள் என முயற்சியும் மேற்கொள்ளத்தேவையில்லை.
● வங்கிப்பரிவர்த்தனையில் உயர் பாதுகாப்பு!!
வங்கிகளுக்கிடையிலான பண பரிவர்த்தனைகளுக்கு உயர் பாதுகாப்பு கொண்டுவரப்பட உள்ளது. பண பரிவர்த்தை இடம்பெறுவதற்கு முன்னர் ‘தகவல் பரிமாற்றம்’ வங்கிகளுக்கும் அதன் பயனாளர்க்ளுக்கும் இடையே இடம்பெறும். அதில் குறிக்கப்பட்ட காலம், திகதி, தொகை, பெயர், முகவரி விடயங்கள் சரியாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே பணம் பரிமாற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகள் முழுவதற்கும் இந்த பொறிமுறை வரும் 9 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
● காகித மெட்ரோ சிட்டைகளுக்கு ’la fin!’
இன்று ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் மெற்றோ பயணச்சிட்டைகளின் தொன்மை வடிவமான காகித அட்டைகளை பெற முடியாது என தெரிவிக்கப்படுகிறது. பேருந்துகளில், மெற்றோ நிலையங்களில் என எங்கேயும் இதனை பெற முடியாது எனவும், அதேவேளை, ஏற்கனவே இந்த காகித பயணச்சிட்டைகள் வைத்திருந்தால் அதனை தொடருந்து பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
IDF Mobilités செயலியை உங்களது ஐபோன் அல்லது ஆன்ரோயிட் போனில் தரவிறக்கி, பயணச்சிட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும். அல்லது நவிகோ போன்ற முற்கட்டண அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
● மீண்டும் MaPrimeRénov!!
கடந்த ஜூன் 23 ஆம் திகதியோடு நிறுத்திவைக்கப்பட்டிருந்த MaPrimeRénov திட்டம், இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதிகளவான மோசடிகள் இடம்பெறுவதால் அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
வீடுகளை புதுப்பிக்கவும், சூழல் நட்பு மாற்றங்களைச் செய்யவும் அரசு இந்த திட்டத்தை வழங்கி வருகிறது.
இந்நிலையில், மிக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இந்த MaPrimeRénov திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 13,000 கோரிக்கைகள் கைவசம் உள்ளதாகவும், இவ்வருட இறுதிக்குள் அவை பொருத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நீங்கள் வசிக்கும் வீடு DPE இல் E, F அல்லது G பிரிவுக்குள் வகைப்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே இந்த திட்டம் வழங்கப்படும் என மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
● மின்சார கார்களுக்கு மேலதிக கொடுப்பனவு!!
மின்சார மகிழுந்துகளை புதிதாக வாங்குபவர்களுக்கு மேலதிகமாக 1,000 யூரோக்கள் கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்பட உள்ளது.
நீங்கள் வாங்கும் முதலாவது மின்சார மகிழுந்துகளுக்கு 4,200 யூரோக்கள் கொடுப்பனவு வழங்கப்படும் நிலையில், அந்த மகிழுந்து ஐரோப்பாவுக்குள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், அதன் மின்கலன்கள் ஐரோப்பாவுக்குள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் இருந்தால், மேலதிகமாக 1,000 யூரோக்கள் வழங்கப்படும். மொத்தமாக 5,200 யூரோக்கள் உதவியை பெற முடியும்.
● உணவு, உடைகளில் புதிய மதிப்பெண்!!
பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவுகளிலும், ஆடைகளிலும் புதிய மதிப்பெண் தரவுகள் பொறுக்கப்பட்டிருக்கவேண்டும் எனும் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
eco-score எனப்படும் இந்த புதிய தரவுகள், குறித்த உணவு, உடை உற்பத்தியால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தப்பட்ட தீங்கினை அளவிடுகிறது. இது ஐரோப்பிய ஆணையம் கொண்டுவந்த சட்டமாகும். இதில் பிரெஞ்சு சுற்றுச்சூழல் மாற்றத்துக்கான அமைச்சகம் பங்கேற்கிறது.
நீங்கள் வாங்கும் உணவு மற்றும் ஆடையினால் சுற்றுச்சூழல் எந்த அளவு பாதிக்கப்படுகிறது என்பதை தெரிவிக்கும் சுட்டி ஒன்றை கட்டாயமாக இணைக்கவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1