அக்டோபர் 2ம் திகதி SNCF தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்; போக்குவரத்துகள் பாதிப்பு!!

30 புரட்டாசி 2025 செவ்வாய் 20:48 | பார்வைகள் : 469
SNCF தொழிற்சங்கங்கள் அக்டோபர் 2ம் திகதி வியாழக்கிழமை மாபெரும் வேலைநிறுத்தம் நடத்த உள்ளன. இதனால் Intercités மற்றும் பிராந்திய ரயில்கள் (TER, RER, Transilien) சேவையில் இடையூறு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிவேக ரயில்கள் (TGV) வழக்கம்போல இயங்கும் என்றும் விமான நிலையங்களில் சிறிய தாமதங்கள் மட்டுமே இருக்கும் என்றும் SNCF தெரிவித்துள்ளது. பரிஸ் மற்றும் சுற்றுப்பகுதிகளில் குறிப்பாக RER C, RER H வழிகள் குறைந்தளவு பாதிப்படையும் நிலையில், RER D, RER E மற்றும் Transilien L, N, R, U போன்ற வழிகளில் கடுமையான சேவை தடைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. பல பஸ் சேவைகளும் பாதிக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதேநேரம், RATP அமைப்பு தங்களது நகரப் போக்குவரத்து சேவைகள் பெரும்பாலும் வழக்கம்போல இயங்கும் என்று உறுதியளித்துள்ளது. தொழிற்சங்கங்கள் அரசு மீது அழுத்தம் கொடுக்கவேண்டிய நிலையில் வேலைநிறுத்தத்தையும் போராட்டங்களையும் வலியுறுத்தியுள்ளன. Beauvais விமான நிலையத்தில் மட்டும் 30% விமானங்கள் ரத்து செய்யப்படும் நிலையில், பிற விமான நிலையங்களில் தாமதங்கள் ஏற்படலாம். பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை முன்கூட்டியே அமைத்து, சம்பந்தப்பட்ட போக்குவரத்து செயலிகளைப் பயன்படுத்தி தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1