தொழிற்சங்கங்கள் தயாரா - தயாரில்லையா?

28 ஆவணி 2025 வியாழன் 12:25 | பார்வைகள் : 622
CFE-CGC நிர்வாகிகளிற்கான தொழிற்சங்கங்கள் (டுந ளலனெiஉயவ னநள உயனசநள), அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்து தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்யும் சமூக இயக்கத்தில் சேர தயாராக உள்ளது. எனினும் செப்டம்பர் 10 அன்று 'அனைத்தையும் முடக்க' வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரித்துள்ளது.
தொழிளார்களின் தொழிற்சங்கங்கள் முடக்கல் போராட்டத்தில் இணைந்திருந்தாலும், மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகளிற்கான அதே தொழிற்சங்கங்கள் முரண்பட்டு நிற்கின்றன.
'நிர்வாகிகள் செப்டம்பர் 10 ஆர்ப்பாட்டத்தில் சேரக் கோரிக்கை விடுக்கவில்லை' ஒரு சமூக இயக்கத்திற்கு 'முன்வைக்க கோரிக்கைகள்' மற்றும் 'பிரச்சினைகளை தீர்க்க பேரங்கள் செய்ய முன்மொழிவுகள்' தேவை. இந்த அடிப்படையில் CFE-CGC எந்த சமூக இயக்கத்திலும் சேர தயாராக உள்ளது' என இந்த நிர்வாகிகளிற்கான தொழிற்சங்கத் தலைவர் பிரான்சுவா ஓம்மெரில் (François Hommeri) தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் தோன்றிய செப்டம்பர் 10 இயக்கத்தை 'தெளிவற்ற தோற்றம் மற்றும் அதிகப்படியான கோரிக்கைகள் கொண்ட' இயக்கமாக சங்கம் விவரிக்கிறது. இது 'தற்காலிக அரசியல் சுயநலத்தால் மாசுபட்டது' எனவும் இந்தத் தொழிற்சங்கம் தெரவித்துள்ளது.
ஜோன்-லுக் மெலோன்சோனின முன்னெடுப்பை சுயநலத்திற்கான அரசியல் என இந்தத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிர்வாகிகள், மேலாளர்களிற்கான தொழிற்சங்கங்கள்:
கட்டமைப்பான பேரங்கள் மூலமே பிரச்சினைகளை தீர்க்க முடியும்
அராஜகமான முற்றுகைகளை எதிர்க்கிறது
அரசியல் கட்சிகளின் சுயநல நோக்கங்களில் இருந்து விலகியிருக்க விரும்புகிறது
இந்த நிலைப்பாடு, செப்டம்பர் 10 இயக்கத்திற்கு எதிரானது அல்ல, ஆனால் அதன் முறைகள் மற்றும் தெளிவற்ற நோக்கங்கள் குறித்தான எதிர்ப்பு
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.