Nano Banana AI கருவியை அறிமுகம் செய்துள்ள கூகுள்

28 ஆவணி 2025 வியாழன் 10:57 | பார்வைகள் : 147
Google நிறுவனம் அதன் Gemini செயலியில் Nano Banana எனும் புதிய AI image editing tool-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய மொடல் கூகுளின் DeepMind தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வடிவமாகும். மேலும், இது படங்களில் (Images) உள்ள நுண்ணிய விவரங்களை துல்லியமாக கையாளும் திறனைக் கொண்டது.
இந்த Nano Banana பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பயனர்கள் தங்கள் நாய்கள், நண்பர்கள் அல்லது தங்களது புகைப்படங்களை ஜெமினிக்கு வழங்கி, அவற்றை வேறு சூழல்களில் Reimagine செய்யலாம்.
உதாரணமாக, ஒருவர் விண்வெளி உடையில் இருப்பது போல மாற்றலாம் அல்லது பொங்காவில் அமர்ந்திருப்பது போல எடிட் செய்யலாம்.
மேலும் இரண்டு தனித்தனி புகைப்படங்களை ஒன்றாக இணைத்து ஒரே சூழலில் இருப்பது போல உருவாக்கும் வசதியும் உள்ளது.
இந்த AI மொடல் வீடுகளுக்குள் சுவரை மாற்றி, புதிய பொருட்களை (Sofa,Lights) சேர்த்து, அந்த அறையின் தோற்றத்தை முன்னோட்டமாக காண உதவுகிறது.
இது வீட்டை மறுசீரமைப்பதற்கான திட்டமிடலுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், Play Store-ல் மோசடி செயலிகளை தடுக்கும் வகையில், புதிய verification முறையை Google அறிமுகப்படுத்தியுள்ளது.