அரசியல் நெருக்கடி - கடைசி நிமிடம் வரை பதவி வகிப்பேன் - எமானுவல் மக்ரோன்

28 ஆவணி 2025 வியாழன் 11:21 | பார்வைகள் : 445
ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், தான் 'கடைசி கால் மணி நேரம் வரை' பதவியில் இருப்பதாகவும், எந்தவொரு பதவி விலகலையும் புறந்தள்ளுவதாகவும் ஒரு செவ்வியில் தெரிவித்துள்ளார்.
'செப்டம்பர் 8 நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு பல அரசியல்வாதிகள் ராஜினாமா கோரிக்கை நிராகரிப்பு - தேர்தலில் தேர்வு செய்யப்பட்டதற்காக பதவி வகிக்கிறேன்' என மக்ரோன் தெரிவித்துள்ளார்.
'2027-ல் எனக்கு தேர்தல் கடடுப்பாடு இல்லை. பொது நலனைத் தவிர வேறு எந்த திசைகாட்டியும் எனக்கு இல்லை' என்று ஜனாதிபதி கூறினார்.
செப்டம்பர் 10 அன்று நாட்டு அளவிலான வேலைநிறுத்தம் மற்றும் முற்றுகை எச்சரிக்கை
பிரதமர் பிரோன்சுவா பய்ரூவின் அரசாங்கம் செப்டம்பர் 8 அன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும். எதிர்க்கட்சிகள் ஏற்கனவே அவநம்பிக்கை தீர்மானம் தயாரித்து வருகின்றன.
செப்டம்பர் 10 அன்று நாட்டு அளவிலான வேலைநிறுத்தம் மற்றும் முற்றுகை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி மக்ரோன் தனது இறுதிப் பதவிக் காலம் வரை (2027 மே) பதவியில் இருப்பேனஇ என உறுதியாகக் கூறியுள்ளார். அரசியல் நெருக்கடி மற்றும் சமூக அமைதிக் குலைவு இருந்தாலும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.