Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : பத்து ஆண்டுகளில் வளிமண்டல தூசு 40% வீழ்ச்சி!!

பரிஸ் : பத்து ஆண்டுகளில் வளிமண்டல தூசு 40% வீழ்ச்சி!!

28 ஆவணி 2025 வியாழன் 10:27 | பார்வைகள் : 322


தலைநகர் பரிசில் கடந்த 10 ஆண்டுகளில் வளிமண்டல தூசு 40% சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

"நாங்கள் பரிசில் சிறப்பாக சுவாசிக்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012 முதல் 2022 ஆம் ஆண்டுவரையான பத்து ஆண்டுகளில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் மூலம் வளிமண்டலம் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், 40% சதவீதம் மாசடைவு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், வளியில் கலந்துள்ள துகள்கள் 28% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வளிமண்டலத்தை கண்காணிக்கும் Airparif நிறுவனம் இத்தகவலை இன்று வெளியிட்டுள்ளது.

பரிசில் வசிக்கும் மக்கள் கறுப்பு நிற மகிழுந்துகளை வாங்குவதற்கு தயங்குவதாகவும், வீதிகளில் நிறுத்தப்படும் மகிழுந்துகள் எளிதில் அழுக்கடைவதாகவும் கருத்துக்கள் நிலவி வந்தன. இந்நிலையில் இந்த வளிமண்டல மாசடைவு முன்னேற்றம் அடைந்துள்ளமை பெரும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்