சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்- ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி

27 ஆவணி 2025 புதன் 20:16 | பார்வைகள் : 169
சீனாவில் அடுத்த வாரம் முன்னெடுக்கப்படவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில் இருபதிற்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் அனைத்து நாடுகளும் புதிய கூடுதல் வரிகளால் மிரட்டப்படும் நிலையில், உலகளாவிய தெற்கு ஒற்றுமையின் வலிமையை அறிவிக்கும் நிகழ்வாக இந்த மாநாடு இருக்கும் என்றே கூறப்படுகிறது.
இந்த உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை தவிர்த்து, மத்திய ஆசியா, மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை வடக்கு துறைமுக நகரமான தியான்ஜினில் இந்த உச்சிமாநாடு நடைபெற உள்ளது. நீண்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும் சீனா செல்லவிருக்கிறார்.
கடந்த ஆண்டு ரஷ்யாவின் கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் மோடி கடைசியாக ஜி மற்றும் புடினுடன் ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டார். இதனிடையே, சீனா மற்றும் இந்தியாவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெறும் என்று ரஷ்யா நம்புவதாக டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள் கடந்த வாரம் தெரிவித்தனர்.
ஆனால், ஜனவரி முதல் சீனா, ஈரான், ரஷ்யா மற்றும் தற்போது இந்தியா மீது ட்ரம்ப் நிர்வாகம் திணித்துள்ள வரிகள் எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தவில்லை என்பதை வெளிப்படுத்த இந்த உச்சிமாநாட்டை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த சீன ஜனாதிபதி ஜி விரும்புவதாக நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், 2001ல் தொடங்கப்பட்ட இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு இதுவரை குறிப்பிடத்தக்க செயல்பாடுகளை எதையும் முன்னெடுக்கவில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் விவகாரத்தில் ஜூன் மாதம் முன்னெடுக்கப்பட்ட SCO பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டவில்லை என்பதுடன், கூட்டு அறிக்கையில் ஜம்முவில் சுற்றுலாப்பயணிகள் மீதான தாக்குதல் தொடர்பில் குறிப்பிடுவதையும் தவிர்த்துள்ளது.
மட்டுமின்றி, ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு SCOவின் கண்டனத்தில் சேர இந்தியாவும் மறுத்துவிட்டது. SCO மாநாட்டில் எதிர்பார்க்கப்படும் கொள்கை அறிவிப்புகள் இல்லாவிட்டாலும், உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு இந்த அமைப்பின் ஈர்ப்பை குறைத்து மதிப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனிடையே, மாநாடு முடித்து பிரதமர் மோடி உடனடியாக இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கும் நிலையில், வார இறுதியில் பெய்ஜிங்கில் நடைபெறும் இரண்டாம் உலகப் போரின் இராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்ளும் பொருட்டு ஜனாதிபதி புடின் சீனாவில் தங்குவார் என்றே கூறப்படுகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3