அனிருத்துக்குக் கல்யாணம் முக்கியமா? ஹிட் பாட்டு முக்கியமா?..

27 ஆவணி 2025 புதன் 14:49 | பார்வைகள் : 184
தமிழ் சினிமாவில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார் அனிருத். இதன் காரணமாக முன்னணி நடிகர்கள் படங்களுக்கு மட்டும்தான் அவர் இசையமைத்து வருகிறார். தமிழ் தாண்டியும் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
தற்போது தமிழில் ரஜினிகாந்தின் ‘கூலி’ மற்றும் ‘ஜெயிலர் 2’ ஆகிய படங்கள் அவர் கைவசம் உள்ளன. படங்களுக்கு இசையமைப்பது போலவே தொடர்ந்து பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். 34 வயதாகும் அனிருத் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் பேச்சிலராக வலம் வருகிறார். அவர் இசையில் உருவாகி வரும், சிவகார்த்திகேயன் –முருகதாஸ் கூட்டணியின் ‘மதராஸி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்த போது சிவகார்த்திகேயன் அனிருத்தின் திருமணம் குறித்து நகைச்சுவையாகப் பேசியது கவனம் ஈர்த்துள்ளது.
அதில் “அனிருத் கல்யாணம் பற்றி எல்லோரையும் போல நானும் அவரிடம் கேட்டேன். கல்யாணம் ஆனவர்களுக்கு எட்டு மணிக்கெல்லாம் வீட்டில் உள்ளவரிடம் இருந்து அழைப்பு வந்துவிடும். ஆனால் அனிருத்துக்கு எட்டு மணிதான் எழுந்திருக்கும் நேரம். அவருக்கு திருமணம் முக்கியமா அல்லது ஹிட் பாடல்கள் முக்கியமா என யோசித்தேன். ஹிட் பாடல்கள்தான் முக்கியம்” என நகைச்சுவையாகப் பேசியுள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3