இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரியுமா ?

26 ஆவணி 2025 செவ்வாய் 18:00 | பார்வைகள் : 163
இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் என்பது சுத்திகரிக்கப்பட்ட கோதுமை அல்லது மைதா மாவு கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து குறைவு, அதோடு எந்தவிதமான ஊட்டச்சத்துக்களும் கிடையாது. மேலும் நூடுல்ஸ் பாக்கெட்டுகளில் கிடைக்கும் மசாலாக்களில் உள்ள சீசனிங் அதிக அளவு சோடியம் கொண்டுள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவில் பாதியை விட அதிகமாக உள்ளது. அதிக அளவு சோடியம் எடுத்துக் கொள்வதால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் கூட ஏற்படலாம்.
பல்வேறு இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பிராண்டுகள் மோனோசோடியம் குளூட்டாமேட் (MSG) போன்ற அடிட்டிவ்களை பிரிசர்வேட்டிவ்களுடன் சேர்த்து நூடுல்ஸ் ஃபிளேவரை அதிகரிக்கவும், அது நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கவும் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான நபர்களுக்கு சிறிய அளவில் MSG பயன்படுத்துவது பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் வயிற்று உப்புசம், தலைவலி மற்றும் மேலும் சில அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். மேலும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பற்றிய மற்றும் ஒரு கவலைக்குரிய விஷயம், அதில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்பு. அவை முன்னதாக பாமாயிலில் பொரிக்கப்பட்டு வெற்று கலோரிகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளை சேர்த்து, உடல் எடை அதிகரிக்கவும், கொலஸ்ட்ரால் அளவுகளை உயர்த்தவும் காரணமாக
எனவே இதற்கு என்ன தீர்வு? நூடுல்ஸ் மிகவும் பிடிக்கும் ஆனால் அதே நேரத்தில் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு சில குறிப்புகள்:- *இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சமைக்கும் போது கீரை, குடைமிளகாய் மற்றும் கேரட் போன்ற காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களை பெற உதவும்.
*மேலும் நூடுல்ஸ் பாக்கெட்டுகளில் கொடுக்கப்பட்டுள்ள சீசனிங்கை பயன்படுத்துவதற்கு பதிலாக நீங்களாக மசாலா பொருட்களை தயார் செய்து எடுத்துக் கொள்ளும் போது அதில் உள்ள சோடியம் அளவு குறையும்.
*வாய்ப்பு கிடைத்தால் பேக் செய்யப்பட்ட அல்லது காற்றில் உலர வைக்கப்பட்ட நூடுல்ஸை பயன்படுத்தவும்.
*மேலும் நூடுல்ஸ் சமைக்கும் போது அதனை முட்டை, டோஃபு அல்லது கிரில்டு சிக்கன் போன்ற புரத மூலங்களை சேர்க்கவும். இந்த விஷயங்களை பின்பற்றும்போது இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் ஓரளவு உங்களால் ஆரோக்கியமானதாக மாற்ற முடியும்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3