நாக் அஸ்வின் படத்தில் இணைகிறாரா சூப்பர் ஸ்டார்?

26 ஆவணி 2025 செவ்வாய் 17:00 | பார்வைகள் : 761
ரஜினி நடிப்பில் கடந்த 14 ஆம் தேதி வெளிவந்த கூலி திரைப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்ற போதிலும் வசூல் ரீதியில் வெற்றி பெற்றுள்ளது.இந்த திரைப்படம் சுமார் 500 கோடி ரூபாயைக் கடந்து வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் லோகேஷ் கனகராஜ் ரஜினி காம்போவில் கூலி திரைப்படம் வெளிவந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.இந்தப் படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், நாகார்ஜுனா, சுருதிஹாசன், அமீர்கான், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கூலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.
புதுச்சேரி அரசு, கேளிக்கை வரியைக் குறைக்க மறுத்துள்ள சூழலில், அங்கு 15 திரையரங்குகளில் மட்டுமே ‘கூலி’ வெளியாக உள்ளது. புதுச்சேரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர், முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு மடங்கு வரி விதிப்பின் காரணமாக எதிர்காலத்தில் நஷ்டம் ஏற்படுமென்றும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ரஜினிகாந்தைச் சந்தித்து இயக்குனர் நாக் அஸ்வின் கதை ஒன்றை கூறியுள்ளார். அந்தக் கதை ரஜினிகாந்த்துக்குப் பிடித்துள்ள நிலையில் அதை டெவலப் செய்யும்படி நாக் அஸ்வினிடம் ரஜினி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்துக்குப் பின்னர் நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.-