Paristamil Navigation Paristamil advert login

லெபனானில் இஸ்ரேல் இராணுவத்தின் போர்க்குற்றம் - சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை

லெபனானில் இஸ்ரேல் இராணுவத்தின் போர்க்குற்றம் - சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை

26 ஆவணி 2025 செவ்வாய் 11:41 | பார்வைகள் : 187


ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகும், தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவத்தின் அட்டூழியங்களை போர்க்குற்றமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

தெற்கு லெபனானில் திட்டமிட்டே பொதுமக்களின் சொத்துக்களை இஸ்ரேல் இராணுவம் பெருமளவில் அழித்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

நவம்பர் 27 அன்று ஏற்பட்ட போர் நிறுத்தம் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவிற்கும் இடையே ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்த பகைமையை பெரும்பாலும் முடிவுக்குக் கொண்டுவந்தது. 

இது இரண்டு மாதங்களாக நீடித்த வெளிப்படையான போரில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

இதன் போது இஸ்ரேல் இராணுவத்தை அனுப்பி ஒரு பெரிய குண்டுவீச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

தற்போது தெற்கு லெபனான் முழுவதும் பொதுமக்கள் சொத்துக்கள் மற்றும் விவசாய நிலங்களை இஸ்ரேலிய இராணுவம் வேண்டுமென்றே அழித்து வருவதாகவும், அதை போர்க்குற்றங்களாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றில் சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

இஸ்ரேல் இராணுவத்தின் இந்த அக்கிரம நடவடிக்கை முழுப் பகுதிகளையும் வாழத் தகுதியற்றதாக்கியது மற்றும் எண்ணற்ற உயிர்களை அழித்துவிட்டது என்றே அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேல் நிர்வாகத்திடம் இது தொடர்பில் கேள்வி எழுப்பிய நிலையில், இதுவரை பதிலளிக்கப்படவில்லை என்றும் மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு ஜனவரி இறுதி வரையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையில், பொதுமக்களின் 10,000 கட்டுமானங்கள் மிக மோசமாக சேதப்படுத்தப்பட்டுள்ளது அல்லது அழிக்கப்பட்டுள்ளது.

24 நகராட்சிகளில் உள்ள வீடுகள், மசூதிகள், கல்லறைகள், சாலைகள், பூங்காக்கள் மற்றும் கால்பந்து மைதானங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கட்டமைப்புகளை நாசமாக்க இஸ்ரேலியப் படைகள் கைமுறையாக வைக்கப்பட்ட வெடிபொருட்களையும் புல்டோசர்களையும் பயன்படுத்தின என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இராணுவத்தின் இந்த அட்டூழியங்களை விசாரிக்க சரிபார்க்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தியதாக மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

 

 

12 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்