இஸ்ரேலை கடுமையாக கண்டிக்கும் கனடிய அரசு

26 ஆவணி 2025 செவ்வாய் 09:31 | பார்வைகள் : 195
இஸ்ரேலின் செயற்பாடுகளை கனடிய அரசாங்கம் கடுயைமாக கண்டித்துள்ளது.
காசாவில் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்ததைத் தொடர்ந்து பிரதமர் கார்னி தலைமையிலான அரசாங்கம் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீன பிரதேசத்தில் இஸ்ரேல் தனது முன்நகர்வுகளை நிறுத்துமாறு கனடா வலியுறுத்தியுள்ளது.
பசியை அளவிடுவதற்கான உலகளாவிய தரநிலையான ஒருங்கிணைந்த உணவு பாதுகாப்பு கட்ட வகைப்பாடு (Integrated Food Security Phase Classification), காசாவின் சில பகுதிகளில் பஞ்சம் நிலவுவதாகவும், அது பரவ வாய்ப்புள்ளதாகவும் கடந்த அறிவிக்கப்பட்டது.
இஸ்ரேல் இந்த கூற்றுகளை நிராகரித்து, உலகளாவிய அழுத்தத்திற்கு பிறகு பிரதேசத்திற்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
எனினும், உதவி அமைப்புகள், அனுமதிக்கப்படும் உதவி இன்னும் போதுமானதாக இல்லை என்று கூறுகின்றன.
காசாவில் மனிதாபிமான நிலைமைகள் மிகவும் மோசமடைவது குறித்து ஆழ்ந்த கவலை வெளியிடுவதாக கனடா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் சர்வதேச சட்டத்தின் கீழ் தனது கடமைகளை "நிறைவேற்றத் தவறிவிட்டது" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் கன்சர்வேடிவ் கட்சி பஞ்சம் குறித்த தகவல்களுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.
ஆனால் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாலஸ்தீன மக்களின் நிலைக்கு ஹமாஸ் பொறுப்பு என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3