அமெரிக்காவில் மனிதர்களின் சதையை உண்ணும் ஒட்டுண்ணி

26 ஆவணி 2025 செவ்வாய் 08:31 | பார்வைகள் : 316
அமெரிக்காவில் மனிதர்களின் சதையை உண்ணும் 'ஸ்க்ரூவோர்ம்' என்ற ஒட்டுண்ணி ஒருவருக்கு தொற்றியுள்ளதை அமெரிக்கா சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
'ஸ்க்ரூவோர்ம்கள்' அல்லது சதை உண்ணும் திருகுப்புழுக்கள் என்பவை ஒருவித ஒட்டுண்ணி ஈக்கள். இதில் பெண் ஈக்கள் கால்நடைகள், காட்டு விலங்குகளில் ஏற்படும் காயங்களில் முட்டையிடுகின்றன.
முட்டைகள் பொரித்தவுடன், நுாற்றுக்கணக்கான திருகுப்புழு லார்வாக்கள் தங்கள் கூர்மையான வாய்களை பயன்படுத்தி, விலங்கின் காயங்களுக்குள்ளும் சென்று, உயிருள்ள சதையைத் துளையிட்டு உண்ணும்.
உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்ட கால் நடையோ, விலங்கோ உயிரிழக்க நேரிடும்.
எனினும் இந்த சதை உண்ணும் ஒட்டுண்ணி மனிதர்களிடத்தில் காணப்படுவது அரிது.
இந்த நிலையில் முதல்முறையாக, அமெரிக்காவின் மத்திய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், நியூயார்க்கில் உள்ள ஒருவரிடம், இந்த ஒட்டுண்ணியைக் கண்டறிந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் , எல் சால்வடாரில் இருந்து திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 1960களில் உள்நாட்டில் ஒழிக்கப்பட்ட இந்த ஒட்டுண்ணி, தற்போது மத்திய அமெரிக்காவிலிருந்து வடக்கே நகர்ந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3