Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க தூதுவரின் குற்றச்சாட்டு பொய்த்தது! - யூத எதிர்ப்பு தாக்குதல்கள் வீழ்ச்சி!!

அமெரிக்க தூதுவரின் குற்றச்சாட்டு பொய்த்தது! - யூத எதிர்ப்பு தாக்குதல்கள் வீழ்ச்சி!!

25 ஆவணி 2025 திங்கள் 18:48 | பார்வைகள் : 7145


இவ்வாண்டின் ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூன் 1 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பிரான்சில் 646 யூத மத விரோத தாக்குதல்கள் பதிவாகியிருந்தன. சென்ற ஆண்டு இதே காலப்பகுதியோடு ஒப்பிடுகையில் 27.5% சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

பிரான்சுக்கான அமெரிக்க தூதுவர், “பிரான்ஸ் யூத விரோத தாக்குதல்களை கண்டுகொள்வதில்லை. நடவடிக்கைகளும் எடுப்பதில்லை” என காரசாரமாக விமர்சித்திருந்தார். இது இடம்பெற்று ஒருவாரத்தை தாண்டவில்லை. அதற்குள்ளாக அரசு புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.


இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 தாக்குதலின் பின்னர் பிரான்சில் திடீரென யூத விரோத தாக்குதல்கள் அதிகரித்திருந்தன. ஆனால் உடனடியாகவே அரசு தலையிட்டு, அதனை வெகுவாக கட்டுப்படுத்தியிருந்தது. தற்போது புதிய அறிக்கையின் படி மேலும் இந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்