ஈபிள் கோபுரம் உக்ரைனின் சுதந்திர தினத்தை நினைவுகூர உக்ரைன் நிறங்களில் ஒளிர்ந்தது!!

25 ஆவணி 2025 திங்கள் 16:38 | பார்வைகள் : 342
உக்ரைனின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 24 அன்று, பரிஸ் நகரம் தனது ஆதரவை வெளிப்படுத்த ஈபிள் கோபுரத்தை உக்ரைனின் தேசிய நிறங்களான மஞ்சள் மற்றும் நீலத்தில் ஒளிரச் செய்தது.
இந்த நாள், உக்ரைனுக்கு சுதந்திரத்தைக் கொண்டாடும் நாளாக மட்டுமல்ல, ரஷ்யா படையெடுப்பினால் தொடங்கிய போர் மூன்று ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் கடந்ததையும் நினைவூட்டுகிறது. பரிஸ் மேயர் ஆன் ஹிடால்கோ, உக்ரைன் மக்களுக்கு தனது உறுதியான ஆதரவை தெரிவித்துள்ளார்.
இது, ஏற்கனவே போர் தொடங்கிய ஒவ்வொரு ஆண்டு நினைவு நாளிலும் பல முறை ஒளிர்ந்துள்ளது. ஆனால், உக்ரைனின் சுதந்திர தினத்தை நினைவுகூர இதுவே முதல் முறையாகும். இதேவேளை, பல பரிஸ் அரசியல்வாதிகள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காசாவில் உயிரிழந்ததை நினைவுகூரும் வகையில் கோபுர ஒளியை அணைக்க வேண்டுமென கேட்டும், அந்த கோரிக்கைகள் பதிலின்றி உள்ளன.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3