Paristamil Navigation Paristamil advert login

மோசெல்லில் 20,000 நாடோடிகள் முற்றுகை

மோசெல்லில் 20,000 நாடோடிகள் முற்றுகை

24 ஆவணி 2025 ஞாயிறு 10:37 | பார்வைகள் : 1699


Moselle இன் Grostenquin விமானத் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் சுவிசேஷக் கூட்டத்தில் ( RASSEMBLEMENT ÉVANGÉLIQUE) நாடோடிகள்(GENS DU VOYAGE) சமூகத்தைச் சேர்ந்த 20,000 பேர் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களின் கரவன் வாகனங்கள் இந்த நகரையே முற்றுகை இட்டுள்ளன.

வாழ்க்கையும் வெளிச்சமும்(Vie et Lumière) சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில் 5,000க்கும் மேற்பட்ட பயண வாகனங்கள் வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகாரிகள் ஓகஸ்ட் 22 அன்று காலை 6 மணிக்கு இந்த தளத்தை திறந்து வைத்தனர், இதன் மூலம் முதல் வந்தவர்கள் வரும் வாரத்திற்கு தங்களது ஏற்பாடுகளை செய்ய முடியும்.

இந்த கூட்டம் Vகஸ்ட் 24 முதல் 31 வரை நடைபெறும். இதனால் சாலைப் போக்குவரத்தில் பெரும் தடங்கல்கள் எற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் விமான தளத்தை அணுக சாலை வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளது

அருகிலுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் இந்த கூட்டத்தால் எற்படும் சிரமங்களால் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

இதனால் பெரும் பாதுகாபபுச் சிக்கல்கள் ஏற்படுவதுடன் பதற்ற நிலையும ஏற்படும் ஆபத்து உள்ளதாக மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை நிலையில் உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்