வேலை தேடுவோர் உதவித் தொகை: 1 ஜனவரி 2026 முதல் ஆபத்து!

24 ஆவணி 2025 ஞாயிறு 09:37 | பார்வைகள் : 1136
ஓகஸ்ட் முதலாம் திகதி அன்று, அரசாங்கம் சமூகப் பங்காளர்களிற்கு புதிய நடைமுறைச் சட்டத்திற்கான «lettre de cadrage» கடிதத்தை' அனுப்பியது, இது 1 ஜனவரி 2026 இல் நடைமுறைக்கு வரும் எனவும், இதற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகள் 15 நவம்பருக்கு முன் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இது வேலை தேடுவோர் உதவித் தொகையின் (ALLOCATIONS CHÔMAGE) புதிய சீர்திருத்தத்திற்கான பேரங்களின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது விதிகளைக் கடுமையாக்கும்.
சில நிறுவனங்களுக்கு பணியாளர்களை நியமிப்பதில் உள்ள சிரமம், இந்த முடிவைத் தூண்டியுள்ளது. நடப்பு அமைப்பு பணியை மீண்டும் தொடங்குவதை போதுமான அளவு ஊக்குவிக்காது என்று நிர்வாகம் கருதுகிறது.
இந்த சீர்திருத்தம் பொது நிதிகளை சீரமைப்பதற்கான தேவை மற்றும் பல ஆண்டுகளில் பல பில்லியன் யூரோக்களை சேமிப்பதற்கான தேவைக்ககாகத திணிக்கப்படுகிறது. 2026 மற்றும் 2029க்கு இடையில் ஆண்டுதோறும் 2 முதல் 2.5 பில்லியன் யூரோக்களை சேமிப்பது அரசாங்கத்தின் இலக்காகும்
2030 முதல் ஆண்டுதோறும் குறைந்தது 4 பில்லியன் யூரோக்கள் இலாபம் அடைய பிரதமர் பிரோன்சுவா பய்ரூ அனுப்பிய இக்கடிதம், பேரங்களுக்கான வரைபடத்தை வழங்குகிறது மற்றும் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகள் நவம்பர் 15க்கு முன் ஒப்புக்கொள்ள அழைக்கிறார்.
இது பிரான்சின் முக்கிய தகமையான தொழிலாளர்களின் உரிமைகளை கேள்விக்குறியாக்கி உள்ளது.
குறைக்கப்பட்ட இழப்பீட்டு காலம்
இந்த புதிய ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் முக்கியமான ஒன்றாக வேலை தேடுபவர்களின் இழப்பீட்டு காலத்தை குறைத்தல். நிர்வாகம் முன்வைத்த யோசனை, வேலை தேடுவோர் உதவித் தொகையின் காலத்தை வேலைவாய்ப்பு சந்தையின் நிலைமையுடன் இணைத்து வேலையின்மை விகிதம் குறைவாக இருந்தால், இழப்பீட்டுக் காலமும் குறைக்கப்படும்.
வேலை தேடுவோர் உதவித் தொகையைப் பெற, நீண்ட காலம் வேலை செய்திருக்க வேண்டும். தற்போது, வேலைக்குத் திரும்புவதற்கான உதவித் தொகையான ARE (allocation d'aide au retour à l'emploi)வைப் பெற, உங்கள் வேலை ஒப்பந்தம் முடிவடைவதற்கு முந்தைய 24 மாதங்களில், அல்லது 53 வயது அல்லது அதற்கு மேல் இருந்தால் 36 மாதங்களில் குறைந்தது 6 மாதங்கள் வேலை செய்திருக்க வேண்டும். இதைத் தான் இஇணைப்பு நிபந்தனை (affiliation condition) என்று அழைக்கிறார்கள்.
இந்த புதிய நிபந்தனையின் திட்டத்தின்படி வேலை தேடுவோர் உதவித் தொகை பெற 8, 10 அல்லது 12 மாதங்கள் வேலை செய்ய வேண்டும் என்பதாகும். நடைமுறையில், இன்று 18 மாதங்கள் இழப்பீடு பெறும் வேலையில்லாதவர் எதிர்காலத்தில் 15 அல்லது 12 மாதங்கள் மட்டுமே பெறுவார். இந்த நடவடிக்கைகள் வேகமாக பணியில் சேர ஊக்குவிக்கும்என அரசாங்கம் நம்புகின்றது.
இந்த அறிவிப்புகளுக்குப் பிறகு, தொழிற்சங்கங்களுக்குள் அச்சம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. வேலை தேடுபவர்கள், குறிப்பாக நிலையான வேலைகளைத் தேட சிரமப்படுபவர்கள், அதிகரித்த பாதிப்புக்கு ஆளாகுவார்கள் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
இதனால் நவம்பரில பெரும் போராட்டங்களும்வேலை நிறுத்தங்களும் நடாத்தப்படும் ஆபத்தும் உள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3